தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராஜ்யோத்சவா விருது கமிட்டி 6 உறுப்பினர்கள் நியமனம்

ராஜ்யோத்சவா விருது கமிட்டி 6 உறுப்பினர்கள் நியமனம்

ராஜ்யோத்சவா விருது கமிட்டி 6 உறுப்பினர்கள் நியமனம்


ADDED : அக் 13, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடப்பாண்டு கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு, சாதனையாளர்களை தேர்வு செய்ய, ஆலோசனை கூறும் கமிட்டிக்கு நடிகரும், இயக்குனருமாக எஸ்.நாராயண் உட்பட ஆறு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆண்டு தோறும் கன்னட ராஜ்யோத்சவா தினத்தில், மாநில அரசு பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களை அடையாளம் கண்டு, விருது வழங்கி கவுரவிக்கிறது. இம்முறையும் சாதனையாளர்களை தேர்வு செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு சாதனையாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, முதல்வர் சிவகுமார் தலைமையில், அக்டோபர் 8ம் தேதியன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் தலைமையில் தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டிக்கு ஆலோசனை கூற, வெவ்வேறு துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டிக்கு நடிகரும், இயக்குநருமான எஸ்.நாராயண், மதன் மல்லு, நஞ்சுண்டே கவுடா, பத்திரிகை துறை சார்ந்த அப்பூர் ராஜசேகர், சமூக சேவகர் நஞ்சுன்டி உட்பட ஆறு பேரை உறுப்பினர்களாக நியமித்து, கன்னடம், கலாச்சார துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us