/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து ரக் ஷாக் புல்லட் சர்ச்சை கருத்து
/
சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து ரக் ஷாக் புல்லட் சர்ச்சை கருத்து
சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து ரக் ஷாக் புல்லட் சர்ச்சை கருத்து
சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து ரக் ஷாக் புல்லட் சர்ச்சை கருத்து
ADDED : மார் 27, 2025 05:31 AM

பெங்களூரு: சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் ரக் ஷாக் புல்லட் கூறிய கருத்து, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னட நகைச்சுவை நடிகர் புல்லட் பிரகாஷ். இவரது மகன் ரக் ஷாக் புல்லட், 24. கன்னட பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர். 2002ல் வெளியான 'குரு சிஷ்யரு' என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கன்னட தனியார் தொலைக்காட்சி நடத்தும், 'ரியாலிட்டி ஷோ'வில் சமீபத்தில் ரக் ஷாக் புல்லட் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து நடித்த, இளம்பெண்ணை பார்த்து வசனம் பேசும்போது, 'உன்னை பார்க்கும் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் மலையில் இருந்து இறங்கி வந்து புடவைக்கு பதிலாக பேன்ட், சட்டையை அணிந்து சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்வது போல் இருக்கிறது' என்று கூறினார்.
இந்த வசனம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சாமுண்டீஸ்வரி அம்மனை அவமதித்துவிட்டதாக, ரக் ஷாக் புல்லட் மீது ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
'பேசிய வார்த்தையில் உள்ள தவறை உணர்ந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று, ரக் ஷாக் புல்லட் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். போலீசில் புகார் செய்வோம்' என, ஹிந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.