ADDED : ஜூன் 19, 2026 10:29 PM

பெங்களூரு: கர்நாடக சுற்றுலா துறை கமிஷனராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கர்நாடகா மின் பரிமாற்ற கழக நிர்வாக இயக்குநராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பணியாற்றுகிறார். இந்நிலையில், அவர், சுற்றுலா துறை கமிஷனராக நேற்று முன்தினம், கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, நேற்று, அவர் பொறுப்பேற்று கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் போது, இதற்கு முன், சுற்றுலா துறை கமிஷனராக பணியாற்றிய போது, கர்நாடகாவில் ஜி- - 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தற்போது, மீண்டும் சுற்றுலா துறை இயக்குனராக தன்னை நியமிக்கப்பட்டதற்கு, சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜுக்கு நன்றி கூறினார்.
இதற்கு முன், சிறப்பாக பணியாற்றியதால், முதல்வர் சிவகுமார் மீண்டும் அந்த பொறுப்பை அவரிடம் கூடுதலாக ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.
