/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.50 கோடி மதிப்பு தங்கம் 3 மாதத்தில் கடத்திய ரன்யா
/
ரூ.50 கோடி மதிப்பு தங்கம் 3 மாதத்தில் கடத்திய ரன்யா
ரூ.50 கோடி மதிப்பு தங்கம் 3 மாதத்தில் கடத்திய ரன்யா
ரூ.50 கோடி மதிப்பு தங்கம் 3 மாதத்தில் கடத்திய ரன்யா
ADDED : ஏப் 04, 2025 06:56 AM

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருக்கு, மூன்று மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது டி.ஆர்.ஐ., விசாரணையில் தெரியவந்து உள்ளது.
துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ், இவரது முன்னாள் காதலன் தருண் கொண்டாரு ராஜு, பல்லாரி நகைக்கடைக்காரர் ஷாகில் ஜெயின் ஆகியோரை, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு கைது செய்தது. ரன்யா, தருண் சிறையில் உள்ளனர்.
டி.ஆர்.ஐ., விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் ஷாகில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏழு நாட்கள் சிறையில் அடைக்க, நீதிபதி விஸ்வநாத் கவுடர் உத்தரவிட்டார். ஷாகிலை சிறையில் அடைக்கும், 'ரிமாண்ட்' மனுவின் மூலம் தங்கம் கடத்தலில் வழக்கில், சில அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
துபாயில் இருந்து ரன்யா கடத்தி வந்த நகைகளை விற்பனை செய்வதற்கு, ஷாகில் பெரும் உதவியாக இருந்து உள்ளார். தங்கம் வாங்குவதற்கு, துபாய்க்கு 38.39 கோடி ரூபாய் ஹவாலா பணம் அனுப்பி உள்ளார். தங்கத்தை விற்று கொடுக்க, ஹவாலா பணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு, ஷாகிலுக்கு, ரன்யா 55,000 ரூபாயை ஒவ்வொரு முறையும் கமிஷனாக கொடுத்து உள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில், ரன்யாவின் 30.34 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை மாற்றவும், உதவி செய்து உள்ளார். ஜனவரியில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 11.55 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ 568 கிராம் நகைகளை, ரன்யாவுக்கு விற்று கொடுத்து உள்ளார்.
பிப்ரவரி மாதம் 11.80 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ 433 கிராம் எடையுள்ள தங்கத்தை விற்று கொடுத்ததுடன், ரன்யாவின் 55 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை மாற்றவும் உதவி செய்து இருக்கிறார்.
'கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து மூன்று மாதங்களில் துபாயில் இருந்து, ரன்யா 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்து இருக்கிறார்' என்று, ரிமாண்ட் மனுவில் கூறப்பட்டு உள்ளது.