/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வழக்கு ரத்து கோரிய ரவி மனு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
வழக்கு ரத்து கோரிய ரவி மனு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கு ரத்து கோரிய ரவி மனு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கு ரத்து கோரிய ரவி மனு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 21, 2025 05:32 AM
பெங்களூரு: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமாக திட்டியதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, மேல்சபையில் பெண்கள் நலத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, ஆபாசமாக திட்டியதாக பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சரை ஆபாசமாக திட்டியதாக, தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ரவி மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது.
ரவியின் வக்கீல் பிரபுலிங்க நவதாகி வாதாடுகையில், ''எங்கள் மனு தொடர்பாக எழுத்துபூர்வ ஆட்சேபனை சமர்பிக்கப்பட்டு உள்ளது. மேல்சபையில் நடந்ததை அடிப்படையாக கொண்டு, குற்றவியல் அல்லது சிவில் வழக்கு பதிவு செய்ய முடியாது. சபையில் நடந்த சம்பவம் தொடர்பாக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவரும் விசாரித்து உள்ளார்.
''சபை நடந்து கொண்டு இருந்தாலும், இல்லாவிட்டாலும், உறுப்பினர்கள் பங்கேற்றாலும், இல்லாவிட்டாலும் சபையில் பேசப்படும் அனைத்து வார்த்தைகளும் பாதுகாக்கப்படும். எனது மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை. அவர் நீதிமன்றத்தை நாடி வந்து உள்ளார்,'' என்றார்.
அரசு வக்கீல் பெல்லியப்பா வாதாடுகையில், ''சம்பவம் நடந்த போது சபை நடக்கவில்லை. ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. சபைக்குள் வைத்து ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியது தவறு. பிரதிவாதிகள் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க, எங்களுக்கு அவகாசம் வேண்டும்,'' என்று கேட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.