sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரெட்டி - - ஸ்ரீராமுலு இடையில் மீண்டும் லடாய்

/

 ரெட்டி - - ஸ்ரீராமுலு இடையில் மீண்டும் லடாய்

 ரெட்டி - - ஸ்ரீராமுலு இடையில் மீண்டும் லடாய்

 ரெட்டி - - ஸ்ரீராமுலு இடையில் மீண்டும் லடாய்


ADDED : ஜன 14, 2026 03:30 AM

Google News

ADDED : ஜன 14, 2026 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனிம சுரங்க தொழிலுக்கு பெயர் பெற்ற பல்லாரியும், கர்நாடக அரசியலும் ஒரே நாணயத்துல இரு பக்கம் போல. அத பிரிக்கவே முடியாது. பல்லாரியில இருக்குற ஐந்து சட்டசபை தொகுதியிலயும், லோக்சபா தொகுதியிலயும், கை கட்சிகாரங்க இப்போ எம்.எல்.ஏ., -- எம்.பி.,யாக இருக்கலாம்.

ஆ னால், ஒரு காலத்துல பல்லாரி காவி கட்சியோட கோட்டை. கனிம சுரங்க தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஜனார்த்தன ரெட்டி, அவருக்கு தோளோடு தோள் கொடுக்குற நண்பர் ஸ்ரீராமுலு இவங்க தான், காவி கட்சியோட முகமாக இருந்தாங்க. கனிம சுரங்க முறைகேடு வழக்குல, ரெட்டி ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறமா; தாடிகாரரு ஸ்ரீராமுலு மாஸ் ஆகிட்டாரு. வால்மீகி சமூக தலைவர் வேற. நான் தான் பல்லாரி அரசியல்ல, மாஸ்ன்னு கெத்து காட்டிக்கிட்டு இருந்தாரு.

ரெட்டி ஜெயில்ல இருந்து வெளியே வந்ததுக்கு அப்புறம், மறுபடியும் காவி கட்சிக்கு வர முயற்சி செய்தாரு. ரெட்டி மறுபடியும் கட்சிக்கு வந்தா, நம்ம இடம் காலி போயிடும்னு பயந்த தாடிகாரரு, நண்பன்னு கூட பார்க்காம ரெட்டிக்கு எதிராக திரும்பிட்டாரு. அவர கட்சியில சேர்த்தா, நான் வெளியே போயிடுவேன்னு மிரட்டுனாரு.

வால்மீகி சமூக ஓட்டுகள் போயிடுமோன்னு, தாடிகாரர் பேச்சையே காவி கட்சி மேலிடமும் கேட்டுட்டு இருந்தாங்க.

ஆனால், தாடிகாரரால, 2018, 2023 சட்டசபை தேர்தலில் பல்லாரி ரூரல்லயும், 2024 லோக்சபா தேர்தலயும் பல்லாரியுல ஜெயிக்க முடியல. அவ்வளவு தான் இவரு பீஸ் போயிட்டார்னு; மறுபடியும் ரெட்டிய கட்சிக்கு கொண்டு வந்துட்டாங்க. சும்மா இருப்பாரா ரெட்டி; வச்சாரு ஆப்பு தாடிக்காரருக்கு.

கடந்த 2024ல் நடந்த சண்டூர் தொகுதி இடைத்தேர்தல்ல போட்டி போட தாடிகாரரு, முட்டி, மோதி பார்த்தாரு.

ஆனால், காவி மேலிடத்துல பேசி தனது ஆதரவாளருக்கு சீட் வாங்கி கொடுத்திட்டாரு ரெட்டி. அப்போது முதல் தான் ரெட்டி - - ஸ்ரீராமுலு லடாய் ஆரம்பமானது.

உசுரு போச்சு இடைத்தேர்தல்ல கை கட்சி ஜெயிச்சிடுச்சு. ஒழுங்கா பிரசாரத்துக்கு வரலன்னு தாடிகாரர் மேல பழி விழுந்துருச்சு.

நான் கட்சிய விட்டு விலக போறேன்னு பில்டப் பலமா கொடுத்தாரு; பெரிய தலைக்கட்டுகள் யாரும் பேசவில்லை என்றாலும், இரண்டாம் கட்ட தலைகள் பேசி தாடிகாரர சமாதானப்படுத்துனாங்க. அதுக்கு அப்புறம் எப்படியோ நண்பர்கள் மீண்டும், இணைந்த கையா ஆனதுலாம் வேற கதை.

இப்போ மறுபடியும் அவங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு. பல்லாரியில கடந்த 1ம் தேதி ரெட்டி வீட்டு முன்னாடி கலவரம் நடந்துச்சு. கை கட்சியோட தொண்டர் உசுரும் போயிருச்சு.

என்னை கொல்ல பார்த்தாங்கன்னு, கை கட்சி எம்.எல்.ஏ., மேல, ரெட்டி குற்றம் சொல்லிட்டு வர்றாரு. இந்த கலவரத்தை கண்டிக்குற வகையில பல்லாரியில இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை போயே தீரணும்னு தாடிகாரர் சொல்றாரு.

ஆனா ரெட்டிக்கு விருப்பம் இல்ல. பல்லாரியில பெரிய போராட்டம் பண்ணலாம்னு நினைக்குறாரு.

செல்வாக்கு பல் லாரியில இருந்து பாதயாத்திரை துவங்குனா சித்ரதுர்கா, துமகூரு வழியாக போகணும். இந்த இரு மாவட்டங்களிலும், வால்மீகி சமூகத்தினர் நிறைய பேரு வசிப்பதால், தன்னோட செல்வாக்கை பெருக்கிடலாம்னு தாடிகாரரு கணக்கு போடுறாரு.

அவரோட செல்வாக்க உயர்த்த, நான் எதுக்கு பணம் செலவழிக்கணும்; என்னோட கோட்டையில பிரமாண்டமான போராட்டத்த நடத்தி காட்டுறேன்னு, ரெட்டி தொடைய தட்டி சொல்றாரு.

பாதயாத்திரை வேணும்னு தாடிகாரரும், வேண்டாம்னு ரெட்டியும் மாறி, மாறி மேலிடத்துல சொல்றாங்க. அட இவங்களுக்கு வேற வேலை இல்லன்னு நினைச்சிகிட்ட மேலிடம், அய்யா சாமி நீங்களே ஒரு முடிவு எடுங்க; எங்களை விடுங்கங்கன்னு சைலன்ட்டா நழுவிட்டாங்க.

இப்போ மாநில தலைவர்கள் மண்டைய, இரு தலை கட்டுகளும் உருட்ட ஆரம்பிச்சி இருக்காங்க. இன்னும் ஓரிரு நாள்ல போராட்டமா, பாதயாத்திரையான்னு தெரிஞ்சுரும். அப்போ தெரிஞ்சுரும் பல்லாரியி ல காவி கட்சி யாரு கட்டுப்பாட்டுல இருக்குன்னு.

- நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us