தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராஜினாமாவை திரும்ப பெற்றாலும் சிவகுமார் மீது ரெட்டி கடும் அதிருப்தி 

 ராஜினாமாவை திரும்ப பெற்றாலும் சிவகுமார் மீது ரெட்டி கடும் அதிருப்தி 

 ராஜினாமாவை திரும்ப பெற்றாலும் சிவகுமார் மீது ரெட்டி கடும் அதிருப்தி 


ADDED : ஜூன் 07, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ராஜினாமாவை திரும்ப பெற்றாலும், காங்கிரஸ் மேலிடம், முதல்வர் சிவகுமார் மீது, அமைச்சர் ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தியில் உள்ளார்.

முதல்வர் சிவகுமார் அமைச்சரவையில் மூத்த எம்.எல்.ஏ., ராமலிங்க ரெட்டிக்கு, நீர்பாசன துறை கிடைத்துள்ளது.

ஆனால், பெங்களூரு நகர வளர்ச்சி துறை கிடைக்காத அதிருப்தியில், 5ம் தேதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சிவகுமார் சமாதானப்படுத்தியதால், ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டார்.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

மனதில் இருந்ததை வெளியே கூறி விட்டேன். என்னிடம் சொல்வதற்கு இனி எதுவும் இல்லை. பதவிக்காக யாருடைய வீட்டின் வாசல் முன்பும் நிற்கும் நபர் நான் இல்லை.

சித்தராமையா அமைச்சரவையில், அறநிலையம், போக்குவரத்து துறையை ஏற்க மற்றவர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் அந்த இரு துறைகளையும் நான் ஏற்று, திறம்பட பணி செய்தேன்.

முதல்வர் சிவகுமார் தான், பெங்களூரு நகர வளர்ச்சி துறையை தருவதாக எனக்கு வாக்குறுதி அளித்தார். இப்போது அதன்படி நடக்கவில்லை. பெங்களூரு நபரான என்னை பெங்களூரில் இருந்து விலக்கி வைத்தால், என்னால் என்ன செய்ய முடியும்.

சித்தராமையா என்னிடம் மொபைல் போனில் பேசினார். 'உங்களிடம் நேரில் நிறைய பேச வேண்டி உள்ளது. நானே வருகிறேன்' எனக் கூறியுள்ளேன்.

நேரம் கிடைக்கும் போது அவரை சந்திப்பேன். இளம் தலைவர் என்பதால் பெங்களூரு நகர வளர்ச்சி துறையை, கிருஷ்ணபைரே கவுடாவிடம் கொடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும் என்று விட்டுவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us