/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கழிப்பறை அருகே டிக்கெட் கவுன்டர் தடுப்பு சுவர் கட்டியதால் நிம்மதி
/
கழிப்பறை அருகே டிக்கெட் கவுன்டர் தடுப்பு சுவர் கட்டியதால் நிம்மதி
கழிப்பறை அருகே டிக்கெட் கவுன்டர் தடுப்பு சுவர் கட்டியதால் நிம்மதி
கழிப்பறை அருகே டிக்கெட் கவுன்டர் தடுப்பு சுவர் கட்டியதால் நிம்மதி
ADDED : ஆக 13, 2025 10:57 PM

பெங்களூரு:பெங்களூரின் சாட்டிலைட் பஸ் நிலையத்தில், டிக்கெட் கவுன்டர் அருகில், ஆண்கள், பெண்களின் கழிப்பறை உள்ளது. தற்போது டிக்கெட் கவுன்டர், கழிப்பறைகள் இடையே சுவர் கட்டியதால் பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.
பெங்களூரின், மைசூரு சாலை சாட்டிலைட் பஸ் நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் அருகிலேயே, ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறை உள்ளது.
இதனால் டிக்கெட் வாங்க, வரிசையில் நிற்கும் பயணியர் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். டிக்கெட் கொடுக்கும் மகளிர் ஊழியர்களுக்கும் தொந்தரவாக இருந்தது.
சமீபத்தில் எழுத்தாளர் குஸ்மா அயரஹள்ளி, இங்கு வந்திருந்தார். அப்போது டிக்கெட் கவுன்டர் அருகில் கழிப்பறை இருப்பதை, பயணியர் அவதிப்படுவதை கவனித்தார்.
இதை போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த போட்டோவை கவனித்த பத்திரிகையாளர் ஒருவர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதை தீவிரமாக கருதிய அமைச்சர் ராமலிங்கரெட்டி, தடுப்பு சுவர் கட்டும்படி உத்தரவிட்டார். அதன்பின் அதிகாரிகள் கழிப்பறை மற்றும் டிக்கெட் கவுன்டர் இடையே, சுவர் எழுப்பி வருகின்றனர்.
இதனால் கவுன்டரில் உள்ள பெண் ஊழியர்கள், பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.
குஸ்மா கூறியதாவது:
சாட்டிலைட் பஸ் நிலையத்தில், இந்த பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் அனைவரும் பார்த்து கொண்டு, மவுனமாக இருந்தனர்.
நான் மைசூருக்கு செல்லும் போது, டிக்கெட் கவுன்டர் அருகிலேயே, கழிப்பறை இருப்பதை கண்டு அருவருப்பாக இருந்தது.
அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க நேரம் இல்லை. எனவே உடனடியாக போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்தேன். என் நண்பர் ஒருவர், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்து, பிரச்னைக்கு தீர்வு கண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.