ADDED : ஜூலை 12, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள பசவனகுடி, பி.டி.எம்., லே -- அவுட், சிக்பேட், ஜெயநகர், பத்மநாபநகர், விஜயநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பல இடங்களில் உள்ள நடைபாதைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நடைபாதையை ஆக்கிரமித்திருந்த பல கடைகளின் கூரைகள், தள்ளுவண்டிகள், பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றினர். இந்த பணிகளின்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடை வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.