தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மானக் ஷா பரேடு மைதானத்தில் இன்று குடியரசு தின கொண்டாட்டம்

 மானக் ஷா பரேடு மைதானத்தில் இன்று குடியரசு தின கொண்டாட்டம்

 மானக் ஷா பரேடு மைதானத்தில் இன்று குடியரசு தின கொண்டாட்டம்


ADDED : ஜன 26, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மானக் ஷா பரேடு மைதானத்தில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடி ஏற்றி உரை நிகழ்த்துகிறார்.

நாடு முழுதும், இன்று 77வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கர்நாடகாவிலும் ஏற்பாடுகள் நடந்துள்ளன. பெங்களூரில் உள்ள மானக் ஷா பரேடு மைதானத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. சரியாக காலை 8:58 மணிக்கு விழா மேடைக்கு வரும் கவர்னர் தாவர்சந்த் கெலாட், காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார்.

பின், திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். பின், மீண்டும் விழா மேடைக்கு வந்து குடியரசு தின உரையாற்றுகிறார். அணிவகுப்பில் ராணுவம், விமான படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்கள், தமிழக காவல் துறை, பல்வேறு பள்ளி மாணவர்கள் என 1,100 பேர் பங்கேற்கின்றனர்.

'இந்தியாவின் ஒற்றுமை மற்றும் புதிய இந்தியா' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிகழ்ச்சியை காண பாஸ் வாங்கி உள்ளவர்கள் காலை 8:00 மணிக்கே நுழைவுவாயில் எண் 5க்கு வர வேண்டும். பர்ஸ், மொபைல் போன்கள் தவிர வேறு பொருட்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.

அவசர சேவைக்கான வாகனங்கள், நுழைவுவாயில் 2ல் நிற்கும்.நிகழ்ச்சி நடக்க உள்ள மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், மைதானத்தை சுற்றி வாகனங்கள் செல்வதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இருந்து துவங்கும் சென்ட்ரல் தெரு முதல் சிவாஜிநகர் பஸ் நிலையம் வரையும்; கப்பன் ரோட்டின் சி.டி.ஓ., சதுக்கம் முதல் கே.ஆர்.சாலை வரையும்; எம்.ஜி.ரோட்டில் இருந்து குயின்ஸ் சதுக்கம் வரைக்கும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us