/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிக்கை
/
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிக்கை
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிக்கை
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிக்கை
ADDED : மார் 04, 2026 05:46 AM

பெங்களூரு: '' அரசு வேலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முன், உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்,'' என,முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் அரசு வேலைகளில் உள்ள காலிபணியிடங்களில் ஆட்களை சேர்ப்பதற்கு முன், உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்கள் எந்த வகையில் நிரப்பப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை தேவை. இது தொடர்பாக, அனைத்து பிரிவினரிடமும் விவாதிக்க வேண்டும். மாநில அரசு நினைத்தால் அனைத்தும் சாத்தியமாகும்.
உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. எனவே, அனைத்து சமூகத்தினரும் உள் இடஒதுக்கீடு கோருகின்றனர். இந்தப் பிரச்னையை எளிமைப்படுத்த வேண்டும். சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு அதைச் செய்ய வேண்டும்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் பேரழிவை ஏற்படுத்தும் முன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதில், உலக தலைவர்கள் உடனடியாக தலையீடு வேண்டும். பெட்ரோலியம்,மத பிரச்னைகளால் மோதல்கள் ஏற்படுகின்றன. எண்ணெய் வளங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்ய, அமெரிக்கா முயற்சிக்கிறது.
துபாய், அபுதாபி, சவுதி அரேபியா போன்ற நாடுகளில்தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நாடுகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

