/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'டாக்டர்' பட்டம் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
/
'டாக்டர்' பட்டம் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
'டாக்டர்' பட்டம் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
'டாக்டர்' பட்டம் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
ADDED : ஜன 29, 2026 06:45 AM
பெங்களூரு: 'பல்கலைக்கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ரமேஷ் பாபு, மேல்சபையில் வலியுறுத்தினார்.
மேல்சபையின் பூஜ்ய நேரத்தில், அவர் பேசியதாவது:
இதற்கு முன் பல்வேறு துறைகளில் அரிய சாதனை செய்தவர்களுக்கு, பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. ஆனால் சமீபஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள், கண்ட, கண்டவர்களுக்கு இந்த பட்டத்தை அளிக்கின்றன. சில பல்கலைக்கழகங்கள், பணம் பெற்று கொண்டு டாக்டர் பட்டம் வழங்குகின்றன.
தகுதியற்றவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதால், அதன் மதிப்புக்கு களங்கம் ஏற்படுகிறது. பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக, விதிமுறைகள் வகுக்க வேண்டும். ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் பட்டங்களுக்கு, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.