/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
4 முக்கிய ரயில் நிலையங்களுக்கு துறவியர் பெயர் சூட்ட கோரிக்கை
/
4 முக்கிய ரயில் நிலையங்களுக்கு துறவியர் பெயர் சூட்ட கோரிக்கை
4 முக்கிய ரயில் நிலையங்களுக்கு துறவியர் பெயர் சூட்ட கோரிக்கை
4 முக்கிய ரயில் நிலையங்களுக்கு துறவியர் பெயர் சூட்ட கோரிக்கை
ADDED : நவ 14, 2025 05:21 AM

பெங்களூரு: 'கர்நாடகாவில் உள்ள நான்கு ரயில் நிலையங்களுக்கு துறவியரின் பெயர்களை சூட்ட வேண்டும்' என மத்திய அரசுக்கு, கனரக, நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உள்ளூர் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரயில் நிலையங்களுக்கு துறவியரின் பெயரை சூட்ட வேண்டும்.
விஜயபுரா ரயில் நிலையத்துக்கு ஞானயோகி ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமிஜி ரயில் நிலையம் எனவும், பெலகாவி ரயில் நிலையத்துக்கு ஸ்ரீ பசவ மகாசுவாமிஜி ரயில் நிலையம் எனவும், பீதர் ரயில் நிலையத்துக்கு சன்னபசவ பட்டதேவர் ரயில் நிலையம் எனவும், சூரகொண்டனகொப்பா ரயில் நிலையத்துக்கு பையாகட் ரயில் நிலையம் எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கர்நாடகாவில் உள்ள நான்கு ரயில் நிலையங்களின் பெயர்களில் மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட வேண்டும். இந்த நான்கு ரயில் நிலையங்களும் தென்மேற்கு ரயில்வேயின் ஹூப்பள்ளி பிரிவின் கீழ் உள்ளன. இந்த துறவியர் நான்கு பேரும் சமூகத்திற்கு பல பங்களிப்புகளை செய்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

