sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புலிக்குட்டியுடன் வீடியோ நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புலிக்குட்டியுடன் வீடியோ நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புலிக்குட்டியுடன் வீடியோ நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : நவ 05, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 07:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: புலிக்குட்டியை வைத்து வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாம்ராஜ் நகர் மாவட்டம், புனஜனுார் வனப்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி தாயை பிரிந்த மூன்று புலிக்குட்டிகள் சுற்றித் திரிந்தன.

இதுகுறித்து அப் பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி, புலிக்குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர்.

இந்நிலையில், மூன்று புலிக்குட்டிகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது. வீடியோவில், ஜீப்பின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி புலிக்குட்டியை நடக்க விட்டு, வாலிபர்கள் வீடியோ எடுத்து மகிழ்வது தெரிகிறது.

இதற்கு சமூக ஆர்வலர் தினேஷ் கல்லல்லி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் படி, வனவிலங்குகளை தொடுவதும், புகைப்படம் எடுப்பதும் சட்ட விரோதம்.

''எனவே, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us