/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்., நரித்தனத்தால் கொதிக்கும் ரத்தம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவேசம்
/
பாக்., நரித்தனத்தால் கொதிக்கும் ரத்தம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவேசம்
பாக்., நரித்தனத்தால் கொதிக்கும் ரத்தம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவேசம்
பாக்., நரித்தனத்தால் கொதிக்கும் ரத்தம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவேசம்
ADDED : மே 12, 2025 06:54 AM

பாகல்கோட்,: ''பாகிஸ்தானின் குள்ள நரித்தனம் மற்றும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முற்பட்டதை கண்டால், என் ரத்தம் கொதிக்கிறது. இப்போதும் எல்லைக்கு சென்று, போரிட வேண்டும் என்ற ஆவேசம் ஏற்படுகிறது,'' என, கார்கில் போரில் இரண்டு கைகளையும் இழந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரங்கப்பா தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கார்கில் யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில், எங்கள் குழுவில் நான் உட்பட ஒன்பது பேர் முகாமில் இருந்தோம். ஒருவர் தண்ணீர் குடிக்க சென்றிருந்தார். அப்போது பாகிஸ்தான் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. எங்கள் முகாம் மீது, பாகிஸ்தான் மிசைல் தாக்குதல் நடத்தியது. இதில் நான் காயமடைந்து சுய நினைவை இழந்தேன்.
எனது இரண்டு கைகள், வலது கால் துண்டானது. என்னோடு இருந்த ஏழு வீரர்களும் அதே இடத்தில் இறந்தது, ஆறு மாதங்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. நாட்டுக்காக போராடிய பெருமை எனக்குள்ளது. அன்றைய தினம் நானும் வீரமரணம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை, இந்தியா நிறுத்தி இருக்க கூடாது. பாகிஸ்தானின் கொழுப்பை அடக்கி இருக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அந்நாடு நரி புத்தி கொண்டதாகும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. அந்த நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவத்தினரை மண்டியிட செய்திருக்க வேண்டும். அந்நாட்டுக்கு இந்தியாவை பற்றிய பயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குள்ள நரித்தனம் மற்றும் இந்தியா மீது தாக்குதல் நடத்த முற்படுவதை கண்டால், என் ரத்தம் கொதிக்கிறது. இப்போதும் எல்லைக்கு சென்று, போரிட வேண்டும் என்ற ஆவேசம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.