/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சாலை வாக்குறுதி' போராட்டம்; பசவராஜ் பொம்மை அழைப்பு
/
'சாலை வாக்குறுதி' போராட்டம்; பசவராஜ் பொம்மை அழைப்பு
'சாலை வாக்குறுதி' போராட்டம்; பசவராஜ் பொம்மை அழைப்பு
'சாலை வாக்குறுதி' போராட்டம்; பசவராஜ் பொம்மை அழைப்பு
ADDED : டிச 16, 2025 11:20 PM

- நமது நிருபர் -:
''மாநிலத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் அரசை கண்டித்து, பா.ஜ.,வினர், 'சாலை வாக்குறுதி' என்ற பெயரில் போராட்டம் நடத்த வேண்டும்,'' என பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை, கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹாவேரி நகரம், கிராமம், மண்டல் அளவிலான புதிய தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை பேசியதாவது:
கொடுத்த வாக்குறுதிப்படி, காங்கிரஸ் அரசு நடந்து கொள்ளவில்லை. வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஹாவேரி பா.ஜ.,வுக்கு இப்போது நல்ல நேரம் வந்து விட்டது. புதிய தலைவர், அனைவரின் நம்பிக்கையை பெற வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. இருப்பினும் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தயாராக வேண்டும். பூத் அளவில், நம் கட்சியை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர், விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் பிரிவுகளில் சுறுசுறுப்பானவர்களை சேர்க்க வேண்டும். ஏழு பிரிவுகள் அமைக்கப்பட்டால், 70 பேர் இருப்பர். பூத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் நேர்மையாக செயல்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மாநிலத்தில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இதை சரி செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுதும், 'சாலை வாக்குறுதி' என்ற பெயரில் போராட்டம் நடத்த வேண்டும். போராட்டம் நடத்தி, அதுதொடர்பான செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

