/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகைக்கடை கூரையை உடைத்து துணிகரம்; ரூ.80 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
/
நகைக்கடை கூரையை உடைத்து துணிகரம்; ரூ.80 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
நகைக்கடை கூரையை உடைத்து துணிகரம்; ரூ.80 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
நகைக்கடை கூரையை உடைத்து துணிகரம்; ரூ.80 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
ADDED : டிச 05, 2025 08:53 AM
கதக்: கதக்கில், நகைக்கடையின் கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம கும்பல் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
கதக் நகரின், மஹேந்திரகரா சதுக்கம் அருகில், 'சாந்ததுர்கா ஜுவல்லரி' என்ற பெயரில் தங்க நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, அங்கு வந்த மர்ம கும்பல் கடையின் முன்பகுதி ஷட்டரை சேதப்படுத்தாமல், கூரையில் துளை போட்டு, கடைக்குள் நுழைந்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து, லாக்கர்களில் இருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
நகைக்கடை உரிமையாளர், நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, திருட்டு நடந்ததை கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த கதக் நகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
தங்க நகைகளுடன், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணமும் கொள்ளை போயுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்துள்ளதால், எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. எனவே கொள்ளையர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
எஸ்.பி., ரோஹன் ஜெகதீஷ், டி.எஸ்.பி., முர்துஜா காஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

