/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
/
போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
ADDED : ஏப் 09, 2025 07:50 AM
ஹூப்பள்ளி : கைது செய்யும்போது போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ., பிடித்தார்.
ஹூப்பள்ளி ஹெக்கேரி பகுதியை சேர்ந்தவர் மாலிக் தாஜூதின் அடோனி.
ரவுடியான, இவர் ஜன்னத் நகரை சேர்ந்த இர்பான் என்பவரிடம், சில மாதங்களுக்கு முன்பு, நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை கொடுக்காமல், மாலிக் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
ஆத்திரமடைந்த இர்பான், கடந்த திங்கட்கிழமை மாலிக்கிடம் சென்று, கடனை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான மாலிக், தன் கூட்டாளிகளுடன் இணைந்து அவரை கடுமையாக தாக்கினார். இதில் இர்பான் நிலைகுலைந்து போனார்.
இதுகுறித்து, பழைய ஹூப்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. மாலிக் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ராகவேந்திரா காலனி அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் இருந்த மாலிக்கை கைது செய்வதற்காக, பழைய ஹூப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ., விஸ்வநாத் தலைமையில் போலீசார் சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த மாலிக்கும், அவரது கூட்டாளிகளும் தப்பிக்க முயற்சித்தனர். மாலிக் போலீசிடம் வசமாக சிக்கினார். அவர் போலீஸ் கான்ஸ்டபிள் ஷரீப் நடாப்பை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
இதை பார்த்த எஸ்.ஐ., விஸ்வநாத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். இருப்பினும், அவர் தப்பிக்க முயற்சித்ததால் காலில் சுட்டுப் பிடித்தார். பின், மாலிக் கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த மாலிக், கான்ஸ்டபிள் ஷரீப், விஸ்வநாத் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை ஹூப்பள்ளி தார்வாட் போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார் சென்று பார்த்தார். பின், அவர் கூறுகையில், ''இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இர்பான், மாலிக் இருவர் மீதும் பழைய ஹூப்பள்ளி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாலிக் ஆட்டோ டிரைவர் என கூறிக்கொண்டு, கந்துவட்டி, வண்டியை பறிமுதல் செய்து வந்துள்ளார். ரவுடிகளின் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

