sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் ரவுடி, ஆட்டோ டிரைவர் கொலை

பெங்களூரில் ரவுடி, ஆட்டோ டிரைவர் கொலை

பெங்களூரில் ரவுடி, ஆட்டோ டிரைவர் கொலை


ADDED : ஜூலை 16, 2025 08:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 08:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலசூரு : பெங்களூரில் ஒரே நாளில் ரவுடி, ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, செயின்ட் ஜான்ஸ் சாலையில் வாடகை வீட்டில் வசித்தவர் சிவகுமார், 46.

ரவுடியான இவர் மீது பாரதிநகர், ஹலசூரு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு 8:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள, ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள், சிவகுமாரை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தப்பி ஓடிய அவர், இரண்டு கார்களுக்கு நடுவில் ஒளிந்து கொண்டார். ஆனாலும் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர்.

தகவல் அறிந்த கிழக்கு மண்டல இணை கமிஷனர் ரமேஷ் பானுாத், டி.சி.பி., தேவராஜ், ஏ.சி.பி., கீதா, பாரதிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிவகுமாரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.

 இதுபோல ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் துாரத்தில், நேற்று மதியம் ஒரு ஆட்டோ நின்றது.

ஆட்டோவுக்குள் அமர்ந்து இருந்த டிரைவர் தர்ஷன், 30, என்பவரை, ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us