/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரவுடி சிவகுமார் கொலை வழக்கு பைரதி பசவராஜுக்கு சம்மன்
/
ரவுடி சிவகுமார் கொலை வழக்கு பைரதி பசவராஜுக்கு சம்மன்
ரவுடி சிவகுமார் கொலை வழக்கு பைரதி பசவராஜுக்கு சம்மன்
ரவுடி சிவகுமார் கொலை வழக்கு பைரதி பசவராஜுக்கு சம்மன்
ADDED : ஜூலை 18, 2025 11:20 PM

பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பெங்களூரு, ஹலசூரு ஏரிக்கரை அருகே செயின்ட் ஜான்ஸ் சாலை பகுதியில் வசித்த, ரவுடியும், ரியல் எஸ்டேட் தொழில் செய்தவருமான சிவகுமார், 44, என்பவர், கடந்த 15ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவானது.
வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலையான சிவகுமாரின் தாய் விஜயலட்சுமி, எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் மீது நான் புகார் அளிக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹென்னுார் அருகே பைரதி பகுதியில் உள்ள, பைரதி பசவராஜ் வீட்டிற்கு, ஹென்னுார் போலீசார் சம்மன் வழங்க சென்றனர்.
பைரதி பசவராஜ் வீட்டில் இல்லாததால், அவரது மகன் நீரஜ், போலீசாரிடம் இருந்து சம்மனை வாங்கினார். இரண்டு நாட்களில் விசாரணைக்கு ஆஜராகும்படி, அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.