தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சரியாக வேலை பார்க்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

 சரியாக வேலை பார்க்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

 சரியாக வேலை பார்க்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம்


ADDED : செப் 26, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தெரு விளக்குகளை பராமரிக்கும் பணியில் அலட்சியம் காண்பித்த ஒப்பந்ததாரர்களுக்கு, 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரில் தெரு விளக்குகள் பராமரிப்பதில் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1ம் தேதி முதல், 23ம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள், அதிகாரிகளின் ஆய்வின் மூலம் தெரு விளக்குகள் பராமரிப்பின்றி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களான எபிலியூம், ஸ்பெக்டரம் என்ஜினியர்ஸ், டிரான்ஸ்குளோபல் பவர் ஆகிய நிறுவனங்களுக்கு, மொத்தம் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

'பராமரிப்பின்றி இருக்கும் தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்யவும், செயலிழந்த அனைத்து தெரு விளக்குகளையும் உடனடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மாற்ற வேண்டும்' என, பெங்., தெற்கு மாநகராட்சி கமிஷனர் கே.என்.ரமேஷ் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us