ரூ.15 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் 2 பேர் கைது
ரூ.15 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் 2 பேர் கைது
ADDED : ஆக 26, 2026 02:55 AM
ஹெப்பால்: பெங்களூரில் 15 கோடி ரூபாய் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ள போலீசார், டில்லியை சேர்ந்தவர் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரின் ஹெப்பால் போலீசார் கடந்த மே மாதம் 35 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., எனும், மெத்தாம் பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, எட்டு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, தொழில்நுட்ப தகவலின் அடிப்படையில் டில்லியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ரவிகுமார், 45, பெங்களூரின் குமாரசாமி லே - அவுட்டில் வசிக்கும் முகமது முதாசீர், 42, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 7.50 கிலோ எடையுள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தாம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து, டிராலியில் வைத்து ரயில் மூலம் டில்லியில் இருந்து பெங்களூரு கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிந்தது.
