sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பிரஜ்வலுக்கு தண்டனை வாங்கி கொடுத்த எஸ்.ஐ.டி., குழுவுக்கு ரூ.25 லட்சம் பரிசு 

/

 பிரஜ்வலுக்கு தண்டனை வாங்கி கொடுத்த எஸ்.ஐ.டி., குழுவுக்கு ரூ.25 லட்சம் பரிசு 

 பிரஜ்வலுக்கு தண்டனை வாங்கி கொடுத்த எஸ்.ஐ.டி., குழுவுக்கு ரூ.25 லட்சம் பரிசு 

 பிரஜ்வலுக்கு தண்டனை வாங்கி கொடுத்த எஸ்.ஐ.டி., குழுவுக்கு ரூ.25 லட்சம் பரிசு 


ADDED : ஜன 24, 2026 05:23 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில், முன்னாள் எம்.பி., பிரஜ்வலுக்கு, சாகும் வரை சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த, எஸ்.ஐ.டி., குழுவுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின், ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 35. இவர், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, 2024ல் வெளியானது. இதனை தொடர்ந்து, பிரஜ்வலுக்கு எதிராக நான்கு பெண்கள் பலாத்கார புகார் அளித்தனர். நான்கு வழக்குகளையும் சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., - பி.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி., குழு விசாரிக்கிறது.

இதில், இரண்டாவது வழக்கில் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனையை வழங்கி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பிரஜ்வலுக்கு தண்டனை கிடைத்த வழக்கில், தடயங்களை சேகரிக்க நிறைய சிரமம் அனுபவித்ததாக எஸ்.ஐ.டி., குழுவினர் கூறி இருந்தனர்.

இந்நிலையில், எஸ்.ஐ.டி., குழுவுக்கு, 25 லட்சம் ரூபாயை ரொக்க பரிசாக அரசு நேற்று அறிவித்தது. அதில், டி.ஜி.பி., ரேங்க் அதிகாரிகளுக்கு தலா 20,000 ரூபாய்; ஐ.ஜி.பி., அதிகாரிகளுக்கு தலா 8,000 ரூபாய்; ஏ.சி.பி., மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள்; மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தலா 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.






      Dinamalar
      Follow us