தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காரில் இருந்த ரூ.2.50 லட்சம் கொள்ளை

 காரில் இருந்த ரூ.2.50 லட்சம் கொள்ளை

 காரில் இருந்த ரூ.2.50 லட்சம் கொள்ளை


ADDED : பிப் 05, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக, கணவர் காரில் வைத்திருந்த பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பெங்களூரின் சின்ன பானவாராவில் வசிப்பவர் ஹேமண்ணா. இவரது மனைவி அனுசுயா. மனைவிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நகரூர் அருகில் உள்ள பி.ஜி.எஸ்., மருத்துவமனைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக, நேற்று காலை அழைத்து வந்தார். சிகிச்சைக்காக 2.50 லட்சம் ரூபாய் கொண்டு வந்தார்.

பணத்தை காரில் வைத்து விட்டு, மனைவியை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றார். இதை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடினர். ஹேமண்ணா தன் மனைவியை, மருத்துவமனையில் சேர்த்து விட்டு, காருக்கு வந்து பார்த்த போது பணம் திருட்டு போனது.

இது தொடர்பாக, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். மனைவியின் சிகிச்சைக்காக, சேர்த்து வைத்திருந்த பணத்தை பறிகொடுத்து ஹேமண்ணா பரிதவிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us