/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீட் பெல்ட் அணியாமல் முதல்வர் விதிமீறல் தள்ளுபடியை பயன்படுத்தி ரூ.2,500 அபராதம்
/
சீட் பெல்ட் அணியாமல் முதல்வர் விதிமீறல் தள்ளுபடியை பயன்படுத்தி ரூ.2,500 அபராதம்
சீட் பெல்ட் அணியாமல் முதல்வர் விதிமீறல் தள்ளுபடியை பயன்படுத்தி ரூ.2,500 அபராதம்
சீட் பெல்ட் அணியாமல் முதல்வர் விதிமீறல் தள்ளுபடியை பயன்படுத்தி ரூ.2,500 அபராதம்
ADDED : செப் 06, 2025 06:49 AM
பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மீறிய வாகன பயணியருக்கு, 50 சதவீதம் தள்ளுபடியில் அபராதம் செலுத்த அனுமதி அளித்த முதல்வர் சித்தராமையா, இச்சலுகையை பயன்படுத்தி 2,500 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.
சாலைப் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள், அபராதம் செலுத்த ஊக்கமளிக்கும் நோக்கில், 50 சதவீதம் தள்ளுபடியில் அபராதம் செலுத்தும் சலுகையை, அரசு அளித்துள்ளது.
ஆகஸ்ட் 23ல் துவக்கப்பட்ட இச்சலுகை, செப்டம்பர் 12 வரை அமலில் இருக்கும். சலுகையை பயன்படுத்தி, பலரும் அபராதம் செலுத்துகின்றனர். இதுவரை, 40 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலாகியுள்ளது.
இதற்கிடையே முதல்வர் சித்தராமையாவும், இந்த சலுகையை பயன்படுத்தி அபராதம் செலுத்தினார்.
முதல்வர் பயன்படுத்தும் இன்னோவா கிரிஸ்டா கார், 2024 முதல் இதுவரை ஏழு முறை, சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளது. இதில் ஆறு முறை முதல்வர் சீட் பெல்ட் அணியாமல், விதிகளை மீறியுள்ளார்.
கடந்த 2024 ஜனவரி 24ம் தேதி, மதியம் 12:19 மணியளவில், பழைய விமான நிலையம் சாலையின், லீலா பேலஸ் சந்திப்பு அருகில் செல்லும் போது, காரின் முன் பகுதி இருக்கையில் அமர்ந்திருந்த முதல்வர், சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. இதே சந்திப்பில், பிப்ரவரி மற்றும் ஆகஸ்டில் இதே காரணத்தால், வழக்குப் பதிவானது.
மார்ச்சில் சந்திரிகா ஹோட்டல் சந்திப்பு, ஆகஸ்டில் சிவானந்தா சதுக்கம், ராஜ்குமார் சிலை சந்திப்பு அருகில், சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தார்.
நடப்பாண்டு ஜூலை 9ல், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் காரிடாரில், முதல்வர் பயணம் செய்த கார் அதிவேகமாக சென்று, சாலை விதிகளை மீறியது. இது இன்டலிஜென்ட் டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதன்படி மொத்தம் 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருந்தது. தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி, 2,500 ரூபாய் அபராதத்தை முதல்வர் நேற்று செலுத்தினார்.