/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.70 கோடி காணிக்கை வசூல்
/
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.70 கோடி காணிக்கை வசூல்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.70 கோடி காணிக்கை வசூல்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.70 கோடி காணிக்கை வசூல்
ADDED : நவ 15, 2025 08:02 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில், மலை மஹாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. 27 நாட்களுக்கு முன்பு, உண்டியல் திறந்தபோது, இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக, காணிக்கை கிடைத்தது.
27 நாட்களுக்கு பின், நேற்று முன் தினம் மலை உண்டியல் திறக்கப்பட்டது. சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், போலீஸ் பாதுகாப்புடன், காலை துவங்கிய பணி, நள்ளிரவு வரை நடந்தது.
2 கோடியே 70 லட்சத்து, 10,492 ரூபாய் காணிக்கை கிடைத்தது. 43 கிராம் தங்கம், 1.600 கிலோ வெள்ளி பொருட்கள், 40 வெளிநாட்டு நோட்டுகள், புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தன.