/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.5 கோடி நகை கொள்ளை: மைசூரு அருகே பட்டப்பகலில் துணிகரம்
/
ரூ.5 கோடி நகை கொள்ளை: மைசூரு அருகே பட்டப்பகலில் துணிகரம்
ரூ.5 கோடி நகை கொள்ளை: மைசூரு அருகே பட்டப்பகலில் துணிகரம்
ரூ.5 கோடி நகை கொள்ளை: மைசூரு அருகே பட்டப்பகலில் துணிகரம்
ADDED : டிச 29, 2025 06:34 AM

மைசூரு: மைசூரு அருகே, ஜுவல்லரியில் புகுந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற, மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர். பட்டப்பகலில் இந்த துணிகரம் நடந்து உள்ளது.
மைசூரு மாவட்டம் ஹுன்சூர் டவுனில் 'ஸ்கை கோல்டு' என்ற பெயரில், ஜுவல்லரி உள்ளது. கடந்த ஏப்ரலில் இங்கு கடை திறக்கப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் 2:00 மணியளவில், கடையின் மேலாளர் அஸ்கர், ஏழு ஊழியர்கள் கடையில் இருந்தனர். திடீரென மூகமுடி அணிந்த 5 பேர் உள்ளே நுழைந்தனர்.
துப்பாக்கியை காண்பித்து ஊழியர்களை மிரட்டினர். தாங்கள் கொண்டு வந்த பையில், நகைகளை அள்ளி போட்டு விட்டு வெளியே வந்தனர். இரண்டு பைக்குகளில் அங்கிருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.
கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், ஐ.ஜி., போரலிங்கய்யா, மைசூரு எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் ஆகியோர் சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நான்கு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஜுவல்லரியில் பகல் நேர காவலாளி இல்லை என்பதை நன்கு அறிந்த கொள்ளையர்கள், கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிந்து உள்ளது.
இங்கு வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் யாருக்காவது, கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடக்கிறது.

