தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குப்பையை தரம் பிரிக்காதவர்களிடம் ரூ.39,800 அபராதம் வசூல்

குப்பையை தரம் பிரிக்காதவர்களிடம் ரூ.39,800 அபராதம் வசூல்

குப்பையை தரம் பிரிக்காதவர்களிடம் ரூ.39,800 அபராதம் வசூல்


UPDATED : நவ 27, 2026 12:06 AM

ADDED : நவ 27, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:06 AM ADDED : நவ 27, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குப்பையை தரம் பிரித்து தராதவர்களிடமிருந்து, 39 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு மாநகராட்சி கமிஷனர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

கழிவுகளிலிருந்து விடுதலை எனும் துாய்மை இயக்கத்தின் கீழ், வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் குப்பையை தரம் பிரித்து தருகின்றனரா என சோதனை செய்யப்பட்டது. மக்கும் குப்பை, மக்கா குப்பை என, தரம் பிரித்து தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹெச்.எஸ்.ஆர்., லே – அவுட் பகுதியில் நடந்த ஆய்வில், கிராசிக் கன்வர்ஜ் என்ற நிறுவனம், அதிகளவிலான குப்பையை தரம் பிரிக்காமலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இதனால், அந்நிறுவனத்திற்கு, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

அதுபோல, பி.டி.எம்., லே – அவுட் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில், 52 பேருக்கு 22,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, முற்றிலும் வசூலிக்கப்பட்டது.

பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்டிய இருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம், 39 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us