/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு... தடை? விதிகளை மீறி நடந்து கொள்வதாக அமைச்சர் ஆவேசம்
/
பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு... தடை? விதிகளை மீறி நடந்து கொள்வதாக அமைச்சர் ஆவேசம்
பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு... தடை? விதிகளை மீறி நடந்து கொள்வதாக அமைச்சர் ஆவேசம்
பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு... தடை? விதிகளை மீறி நடந்து கொள்வதாக அமைச்சர் ஆவேசம்
ADDED : அக் 12, 2025 10:08 PM

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், விஜயதசமி நாளில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனும், ஆர்.எஸ்.எஸ்., தோற்றுவிக்கப்பட்டது. ஹிந்து பாரம்பரியம், கலாசாரம் குறித்து, ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அமைக்கப்பட்ட சங்கமாகும். சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த சங்கம், தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுகிறது.
தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வின் தாய் அமைப்பாகவும் உள்ளது. ஆனால், காங்கிரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., என்றால் வேப்பங்காய் போன்று கசக்கும். மத்தியில் காங்கிரஸ் அரசில் பிரதமராக இருந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு பல முறை தடை விதிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்த சூழலில், விஜயதசமியை முன்னிட்டு, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதை கண்டு எரிச்சல் அடைந்துள்ள காங்கிரஸ் அரசு, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு தடை விதிக்க ஆலோசிக்கிறது.
சட்ட அஸ்திரத்தை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்க முடியாது என்பதை, அரசு உணர்ந்துள்ளது. எனவே பள்ளி, கல்லுாரி வளாகம், பூங்கா, அரசு மைதானம், ஹாஸ்டல் வளாகங்கள் உட்பட, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு தடை விதிக்க ஆலோசிக்கிறது. இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனதில் தாக்கம் இது குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், பொது மைதானங்களை பயன்படுத்தி, கோஷமிட்டபடி சிறார்கள், இளம் தலைமுறையினர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இது இந்தியாவின் சமத்துவம், அரசியல் நோக்கத்துக்கு எதிரானதாகும்.
போலீசாரின் அனுமதி பெறாமல், தடிகளை பிடித்தபடி அணிவகுப்பு நடத்துவதன் மூலம், சிறார்கள், இளம் தலைமுறையினர் மனதில், தவறான எண்ணங்களை ஏற்படுத்துகின்றனர்.
இதை தவிர்க்கும் வகை யில், அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மைதானங்கள், பூங்காக்கள், அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்கள், தொல் பொருள் துறை இடங்கள் உட்பட, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இது குறித்து, அரசுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அரசும் ஆலோசனை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
100 சதவீதம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணன் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த சங்கமா. காந்தியை கொன்ற சங்கமாகும். இதை காங்கிரஸ் அரசு, ஏற்கனவே தடை செய்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. வரும் நாட்களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸ்., தடை செய்யப்படுவது 100 க்கு 100 சதவீதம் உறுதி.
இந்த சங்கத்தை தடை செய்தால், நாட்டில் மக்கள் அமைதியாக வாழ வாய்ப்பு கிடைக்கும். ஓட்டுகளை திருடி தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறச் செய்வதே ஆர்.எஸ்.எஸ்., தான். இப்படிப்பட்டவர்களை, 'கறுப்பு தொப்பி' என, துணை முதல்வர் சிவகுமார் விமர்சித்தது சரிதான்.
நாட்டை நாசமாக்கும் இந்த சங்கத்தை ஒழிக்க வேண்டும் என, ராகுல் தினமும் போராடுகிறார். அவருக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.