/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னை தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., தயார்
/
பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னை தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., தயார்
பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னை தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., தயார்
பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னை தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., தயார்
ADDED : ஜூலை 03, 2025 05:13 AM
பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜ.,வில் நிலவும் உட்கட்சி பிரச்னையை தீர்க்க, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திரா மாற்றக்கோரி, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ் ஆகியோர் போர்க்கொடி துாக்கி உள்ளனர். எம்.எல்.சி., ரவி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் உட்கட்சி பிரச்னை தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலையில், பா.ஜ.,வில் நிலவும் உட்கட்சி பிரச்னை மேலிடத்தை கவலை அடைய செய்துள்ளது.
இந்த பிரச்னையை தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது. விஜயேந்திரா அதிருப்தி அணியில் இருப்பவர்களை அழைத்து, 'கட்சிக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுங்கள்' என, அறிவுரை வழங்க ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.