தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 22 ஆட்டோக்கள் பறிமுதல் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி

22 ஆட்டோக்கள் பறிமுதல் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி

22 ஆட்டோக்கள் பறிமுதல் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி


ADDED : ஜூலை 04, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இரு மடங்கு கட்டணம் வசூலித்ததாக 22 ஆட்டோக்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் பைக் டாக்சி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, பெங்களூரில் பயணியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் இரு மடங்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து பலரும் புகார் கூறிய நிலையில், கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் எலக்ட்ரானிக் சிட்டி, கே.ஆர்., புரம், எலஹங்கா, ஞானபாரதி நகர், தேவனஹள்ளி ஆகிய இடங்களில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, இரு மடங்கு கட்டணம் வசூலித்த 22 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத 125 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை நடந்த சோதனையில், 212 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 731 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us