/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமனுார் சிவசங்கரப்பாவின் உடல்நிலை குறித்து வதந்தி
/
சாமனுார் சிவசங்கரப்பாவின் உடல்நிலை குறித்து வதந்தி
சாமனுார் சிவசங்கரப்பாவின் உடல்நிலை குறித்து வதந்தி
சாமனுார் சிவசங்கரப்பாவின் உடல்நிலை குறித்து வதந்தி
ADDED : நவ 28, 2025 05:53 AM
தாவணகெரே: உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனுார் சிவசங்கரப்பாவின் போட்டோவை போட்டு, மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் 'ஓம் சாந்தி' என போஸ்ட் செய்ததை, சிவசங்கரப்பாவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இது குறித்து சிவசங்கரப்பாவின் இரண்டாவது மகன் கணேஷ், நேற்று அளித்த பேட்டி:
என் தந்தை ஆரோக்கியமாக இருக்கிறார். இன்னும் சில நாட்களில் தாவணகெரேவுக்கு வருவார். மூச்சு திணறல் பிரச்னையால், அவரை பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவரது உடல் குணமடைந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் மருத்துவமனைக்கு வந்து, நலம் விசாரிக்கின்றனர்.
அவரது உடல் முழுமையாக குணமடைய, இரண்டு வாரங்கள் ஆகும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த தேர்தலிலும் அவர் போட்டியிடுவார். அவருக்காக விசுவாசிகள் பூஜை செய்கின்றனர்.
என் தந்தையை பற்றிய அனைத்து வதந்திகளும் பொய்யானவை. யாரும் வருந்த வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரை, கடவுள் தண்டிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

