டில்லி சென்றிருந்த சடக் ஷரி திடீர் உடல் நலக்குறைவு
டில்லி சென்றிருந்த சடக் ஷரி திடீர் உடல் நலக்குறைவு
ADDED : ஜூன் 12, 2026 03:04 AM

- நமது நிருபர் -:
அமைச்சர் பதவிக்காக டில்லி சென்றிருந்த, திப்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சடக் ஷரிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துமகூரின் திப்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சடக் ஷரி, 77. அமைச்சர் பதவி கோரி, நேற்று முன்தினம் டில்லி சென்றார். கர்நாடக பவனில் தங்கியிருந்தார்.
நேற்று காலையில், கர்நாடக பவனில் உள்ள அறையில், துணை முதல்வர் பரமேஸ்வரை சந்தித்து பேசி கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், பேச முடியாமல் தவித்தார்.
அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வர், தனது அலுவலக ஊழியர்கள், எம்.எல்.சி., ராஜேந்திரா உதவியுடன், சடக் ஷரியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சடக் ஷரி, உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியானது. மருத்துவமனைக்கு சென்ற பரமேஸ்வர், மருத்துவர் களிடம் தகவல் பெற்றார்.
எம்.எல்.ஏ.,வின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் 'டிஸ்சார்ஜ்' ஆவார் என்றும், துணை முதல்வர் பரமேஸ்வரா கூறினார். நரம்பியல் தொடர்பான நோய்க்கு சடக் ஷரி சிகிச்சை பெறுகிறார்.
