தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஜயேந்திராவை துாக்கியெறியுங்கள் சதானந்த கவுடா ஆடியோவால் அதிர்ச்சி

 விஜயேந்திராவை துாக்கியெறியுங்கள் சதானந்த கவுடா ஆடியோவால் அதிர்ச்சி

 விஜயேந்திராவை துாக்கியெறியுங்கள் சதானந்த கவுடா ஆடியோவால் அதிர்ச்சி


ADDED : ஜூன் 30, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து துாக்கியெறியும்படி முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா, மேலிட தலைவர் ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் ஆடியோ பரவி, பா.ஜ.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பா.ஜ.,வில் மாநில தலைவர் மாற்றம் தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. 'விஜயேந்திரா திறமையானவர் இல்லை. அரசியல் அனுபவம் குறைவு. இவரை மாற்றிவிட்டு, வேறு திறமையான தலைவரை நியமிக்க வேண்டும்' என, சிலர் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

இதற்கிடையே, மேலிட தலைவர் ஒருவரிடம், முன்னாள் முதல்வர் சதானந்தவுடா ஆங்கிலத்தில் பேசிய உரையாடல் தொடர்பான ஆடியோ பரவியுள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை, பதவியில் இருந்து துாக்கியெறியுங்கள். ஆனால் தற்போதைக்கு மாற்ற வேண்டாம். இன்னும் மூன்று மாதங்களில் அவர் மூன்று ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்கிறார். மாநில தலைவர் பதவி காலம், மூன்று ஆண்டுகள் என்பது பா.ஜ.,வின் நெறிமுறை. இப்போதே அவரை பதவியில் இருந்து நீக்கினால், லிங்காயத்துக்கு எதிராக செயல்படுவதாக, பா.ஜ.,வுக்கு அவப்பெயர் ஏற்படும். அது கட்சியை பாதிக்கும்.

எனவே வரும் அக்டோபர் வரை காத்திருந்து, அதன்பின் விஜயேந்திராவை நீக்குங்கள். அப்போது அவரை நீக்கினால், யாரும் கேள்வி கேட்க வாய்ப்பிருக்காது. மூன்று ஆண்டுக்கு பின், அவரையே பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்கும் போது, சிறிது எதிர்ப்பு எழக்கூடும்.

ஆனால், தகுதியானவரை நாம் மாநில தலைவராக்கினால், அனைவரின் எதிர்ப்பும் மறையும். கட்சியில் எனக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், ஏற்க தயாராக இருக்கிறேன். எனக்கு கடவுள் மீது, நம்பிக்கை உள்ளது. மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோவால் சதானந்த கவுடா மீது, எடியூரப்பா ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

எந்த தவறும் செய்யவில்லை!

இது தொடர்பாக, சதானந்தகவுடா நேற்று அளித்த பேட்டி:

ஆடியோ பற்றி நான் எந்த பதிலும் கூறமாட்டேன். ஆடியோ குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து, ஊடகத்தினரே விசாரணை நடத்தி, உண்மைகளை கண்டுபிடிக்கட்டும். உண்மைகள் வெளியே வரட்டும். நான் ஏன் புகார் அளிக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை.

என்னை பற்றி பலரும் விமர்சனம் செய்கின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில், நான் சில வார்த்தைகளை கூறியுள்ளேன். மத்திய, மாநில தலைவர்கள் கேட்டால் விளக்கம் அளிப்பேன். நான் தேசிய அளவிலான பதவிகளை பார்த்தவன். மாநில தலைவரை ஊடகத்தினர் வரவழைக்கட்டும். அவரது முன்னிலையில் என்னை பேச வைக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us