முள் படுக்கையில் படுத்துள்ளார் சிவகுமார் பற்றி சதானந்தா கருத்து
முள் படுக்கையில் படுத்துள்ளார் சிவகுமார் பற்றி சதானந்தா கருத்து
ADDED : ஜூன் 06, 2026 03:47 AM

மங்களூரு: சிவகுமார் முதல்வரான நேரம், சரியில்லை என தோன்றுகிறது. அவர் இப்போது முள் படுக்கையில் படுத்துள்ளார், என, மாநில பா.ஜ., முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழல் காரணமாக, மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்துள்ளன. கோஷ்டி அரசியல் நடக்கிறது. ராமலிங்கரெட்டி அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்திருப்பதை கண்டால், முதல்வர் சிவகுமார் முள் படுக்கையில் படுத்திருப்பது போல தெரிகிறது.
இது, பீஷ்மரின் இறுதி காலத்தை போன்றுள்ளதாக, எனக்கு தோன்றுகிறது.
ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த நபர், முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பது, எங்களுக்கு கவுரவம் அளிக்கிறது. ஆனால், அவரால் ஆட்சி காலத்தை, வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாது. சிவகுமார் முதல்வரான நேரம், சரியில்லை என, நினைக்கிறேன்.
நான் ஒரு திருப்தியான அரசியல்வாதி. தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனக்கு ராஜ்யசபாவில் வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன். ஆனால், பதவிக்காக கட்சி மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுக்கமாட்டேன். சில நாட்களுக்கு முன் நடந்த, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், 13 பேர் என் பெயரை சிபாரிசு செய்துள்ளனர்.
கட்சியின் தேசிய தலைவரின் உத்தரவுக்கு, நான் கட்டுப்படுவேன். மாநில தலைவர் மாற்றம் குறித்து, மேலிடம் முடிவு செய்யும்.
அரசியலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றுள்ளான். மாநில தலைவராக, முதல்வராக, அமைச்சராக பணியாற்றினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
