/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
/
சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
ADDED : நவ 15, 2025 08:02 AM
பெங்களூரு: சாய்பாபா நுாற்றாண்டு விழாவை ஒட்டி, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தென்மேற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்பட உள்ள சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று மதியம் 1:00 மணிக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் 06543, நாளை காலை 6:40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் செல்லும்.
நாளை காலை 9:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்படும் ரயில் 06544, நாளை மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு, கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வந்தடையும்.
வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் 06549, மறுநாள் காலை 6:40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும். 23ம் தேதி காலை 9:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் 06550, மறுநாள் காலை 3:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி.,க்கு வரும்.
இந்த ரயில்கள் கே.ஆர்.புரம், பங்கார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கானுார், காயங்குளம், கொல்லம், வர்கலா சிவகிரி ரயில் நிலையங்களில் நிற்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

