/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 31, 2025 11:21 PM
பெங்களூரு: 'ஸ்ரீ சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜயவாடா - எலஹங்கா, செகந்திரபாத் - பெங்., கன்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்க அனகாபள்ளி - எலஹங்கா; விஜயவாடா - எலஹங்கா; செகந்திரபாத் - கன்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வரும் 13ம் தேதி மாலை 5:15 மணிக்கு விசாகப்பட்டினத்தின் அனகாபள்ளியில் இருந்து புறப்படும் ரயில் எண்: 07409 மறுநாள் மதியம் 12:30 மணிக்கு எலஹங்கா வந்தடையும். 14ம் தேதி மதியம் 2:00 மணிக்கு எலஹங்காவில் இருந்து புறப்படும் ரயில் எண்: 07410 மறுநாள் காலை 11:00 மணிக்கு அனகாபள்ளிக்கு செல்லும்.
வரும் 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு, ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து புறப்படும் ரயில் 07411, மறுநாள் காலை 10:00 மணிக்கு எலஹங்கா வந்தடையும். 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு எலஹங்காவில் இருந்து புறப்படும் ரயில் 07412, மறுநாள் காலை 6:40 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
வரும் 22ம் தேதி மாலை 6:05 மணிக்கு, செகந்திரபாத்தில் இருந்து புறப்படும் ரயில் 07413, மறுநாள் காலை 10:45 மணிக்கு கன்டோன்மென்ட் வரும். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு கன்டோன்மென்டில் இருந்து புறப்படும் ரயில், 07414 மறுநாள் காலை 7:45 மணிக்கு செகந்திரபாத் சென்று அடையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

