/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலைமறைவான பா.ஜ., - எம்.எல்.ஏ.,; மஹா., கோவாவில் தேடுதல் வேட்டை
/
தலைமறைவான பா.ஜ., - எம்.எல்.ஏ.,; மஹா., கோவாவில் தேடுதல் வேட்டை
தலைமறைவான பா.ஜ., - எம்.எல்.ஏ.,; மஹா., கோவாவில் தேடுதல் வேட்டை
தலைமறைவான பா.ஜ., - எம்.எல்.ஏ.,; மஹா., கோவாவில் தேடுதல் வேட்டை
ADDED : டிச 22, 2025 06:34 AM

கே.ஆர்.புரம்: கொலை வழக்கில் தலைமறைவான பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை மஹாராஷ்டிரா, கோவாவில் கர்நாடக சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே, ஜூலை 15 ம் தேதி நடந்த, ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலையில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் உட்பட சிலர் மீது பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை தற்போது சி.ஐ.டி., விசாரிக்கிறது. வழக்கின் முதல் குற்றவாளியான எம்.எல்.ஏ., ஆதரவாளர் ஜெகதீஷ், கூலிப்படையை சேர்ந்தோர் என 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
பைரதி பசவராஜ் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரானார். கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் பெற முயன்றார். இவரது மனுவை உயர் நீதிமன்றம் கடந்த 18 ம் தேதி தள்ளுபடி செய்தது. தேவைப்பட்டால் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று கொள்ளலாம் என்றும், நீதிபதி சுனில் தத் யாதவ் கூறி இருந்தார்.
இதையடுத்து முன்ஜாமின் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் பைரதி பசவராஜ் மனு செய்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
இதற்கிடையில் கைதில் இருந்து தப்பிக்க எம்.எல்.ஏ., தலைமறைவாகி விட்டார். அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. இவரது ஆதரவாளரான அஜித் என்ற மலையாளி அஜித்தை பிடித்து, சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
மஹாராஷ்டிராவின் புனே அல்லது கோவாவில் பைரதி பசவராஜ் இருக்கலாம் என்று கிடைத்த தகவலின்படி, அங்கு சென்ற சி.ஐ.டி.,யின் இரண்டு தனிப்படை போலீசார், அவரை தேடிவருகின்றனர்.
இன்னொரு தனிப்படை பைரதி பசவராஜின் குடும்பத்தினர், நெருங்கிய ஆதரவாளர்களை கண்காணித்து வருகிறது.

