/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் மூத்த வக்கீல் கடும் எதிர்ப்பு
/
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் மூத்த வக்கீல் கடும் எதிர்ப்பு
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் மூத்த வக்கீல் கடும் எதிர்ப்பு
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் மூத்த வக்கீல் கடும் எதிர்ப்பு
ADDED : டிச 09, 2025 06:28 AM

பெங்களூரு: 'கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தேர்தல் முடிந்துள்ள நிலையில், சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கூடாது' என்று அரசுக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மூத்த வக்கீல் அம்ரிதேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால், இம்மைதானத்தில், சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளும் நடத்த அனுமதி அளிக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
சங்கத்தின் உறுப்பினராக இருப்பதால், தேர்தலில் ஓட்டு போட்ட துணை முதல்வர் சிவகுமார், 'இம்மைதானத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மூத்த வக்கீல் அம்ரிதேஷ், மாநில தலைமை செயலர், உள்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு - அவசர சேவை துறை, பொதுப்பணி துறை, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அதிகளவில் கூட்டம் சேர்ப்பது ஆபத்து என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் துணை முதல்வர் சிவகுமாரோ, 'சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
சம்பந்தப்பட்ட துறைகளின் ஆலோசனைகளை கேட்காமல் அவர் பேசியிருப்பது அரசியல் நோக்கமாகும். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை மனதில் கொண்டு, அனுமதி தருவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை கமிட்டியும், 'பெரியளவில் கூட்டம் கூடுவது மைதானத்துக்கு பாதமாக அமையும்.
எனவே, கிரிக்கெட் போட்டிகளை நகரின் வெளிப்புறத்தில் அல்லது வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்தலாம்' என்று பரிந்துரைத்து உள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

