தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விமான நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தற்கொலை

விமான நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தற்கொலை

விமான நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தற்கொலை


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கே.ஆர்.புரம்: மத்திய அரசின் விமான மேம்பாட்டு நிறுவனத்தின், மூத்த விஞ்ஞானி, அடுக்கு மாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு பழைய விமான நிலைய சாலை விமானபுரா பகுதியில், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு உட்பட்ட விமான மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. இங்கு, ‘எப்’ கிரேடு விஞ்ஞானியாக சரத் கடியார், 47, பணியாற்றினார். கே.ஆர்.புரம் சீகேஹள்ளியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.

கடந்த 21ம் தேதி மாலை வேலை முடிந்ததும், சரத் வீட்டிற்கு சென்றார். வயதான தந்தையை தவிர வீட்டில் யாருமே இல்லை.

வீட்டிற்குள் அங்கும், இங்குமாக ஓடிய சரத், விசித்திரமாக நடந்து கொண்டார். பின், அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை, காவலாளிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.

கே.ஆர்.புரம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவர், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததும், ‘நிமான்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்தது.

கடந்த 21ம் தேதி காலையும், மருத்துவமனைக்கு சென்று விட்டு அலுவலகம் சென்றதும், வீட்டிற்கு திரும்பியதும் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்துள்ளது. மனஅழுத்தம் மட்டும் தான் காரணமா, அவருக்கு வேறு பிரச்னை இருந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us