தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/‘கிரஹலட்சுமி’ பணத்தில் தொழில் துவங்கிய சகுந்தலா

‘கிரஹலட்சுமி’ பணத்தில் தொழில் துவங்கிய சகுந்தலா

‘கிரஹலட்சுமி’ பணத்தில் தொழில் துவங்கிய சகுந்தலா


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதி திட்டங்களில், கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவியருக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். மிக்சி, வாஷிங்மெஷின், பிரிஜ் உட்பட, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகின்றனர்.

கிரஹலட்சுமி பணத்தை சேமித்து வைத்து, பேன்சி ஸ்டோர், ஐஸ்கிரீம் கடை, மிளகாய் அரைக்கும் ஆலை அமைத்தது என, பல்வேறு தொழில்கள் துவக்கினர். தங்கள் நிலத்தில் நீர் பாசன வசதிக்காக போர்வெல் தோண்டினர். தற்போது அங்கன்வாடி ஊழியர் ஒருவர், துணிக்கடை மற்றும் தையல் கடை திறந்துள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின், மனிநால்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா. இவர், அங்கன்வாடியில் பணியாற்றுகிறார். இவர், தனக்கு கிடைத்த கிரஹலட்சுமி பணத்தை செலவிடாமல், சேமித்து வைத்திருந்தார்.

அங்கன்வாடியில் பணியாற்றினாலும், சரியாக ஊதியம் கிடைப்பதில்லை. எனவே, அந்த பணியை நம்பியிருக்காமல், சுயதொழில் துவங்க வேண்டும் என்பது, அவரது நெடு நாளைய கனவாக இருந்தது.

இவருக்கு கிடைத்த, 32 மாத கிரஹலட்சுமி திட்டத்தின் 64,000 ரூபாயை, வங்கியில் சேமித்து வைத்திருந்தார். தபால் அலுவலகத்தில் சேமித்திருந்த 1.10 லட்சம் ரூபாயுடன், கிரஹலட்சுமி திட்டத்தின் பணத்தையும் சேர்த்து, துணிக்கடை மற்றும் தையல் கடை திறந்தார். இம்மாதம் 15ம் தேதியன்று கடையை திறந்தார். இந்த கடைக்கு, ‘ஸ்ரீதுர்கா கிரஹலட்சுமி’ என, பெயர் சூட்டியுள்ளார்.

இரண்டு தையல் இயந்திரங்களை வாங்கியுள்ளார். பெங்களூரின், சிக்பேட்டில் இருந்து பேன்சி பொருட்கள், ரெடிமேட் உடைகள், பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார். தன் கடையில் ரவிக்கை மற்றும் சுடிதார் தைக்கவும், வியாபாரத்தை கவனிக்கவும் இரண்டு இளம் பெண்களை நியமித்துள்ளார்.

தினமும் காலை 8:00 மணிக்கு கடையை திறக்கும் சகுந்தலா, 9:30 மணி வரை வியாபாரத்தை கவனிக்கிறார். அதன் பின், அங்கன்வாடி பணிக்கு செல்கிறார். மாலை, 4:00 மணிக்கு அங்கன்வாடி பணியை முடித்து கொண்டு, மீண்டும் தன் துணிக்கடைக்கு வந்து வியாபாரத்தை கவனிக்கிறார்.

இதற்கு முன் அப்பகுதியினர், புதிதாக உடைகள் வாங்கவும், துணி தைக்கவும் பன்ட்வாலுக்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது கிராமத்திலேயே சகுந்தலா துணிக்கடை திறந்துள்ளதால், கிராமத்தினருக்கு மிகவும் உதவியாக உள்ளது.

அரசின் இலவச திட்டங்கள், மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு, சகுந்தலா சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல, வெறும் 2,000 ரூபாய் தானே என, செலவிடாமல் சேர்த்து வைத்து, தற்போது தொழிலதிபராக அடியெடுத்து வைத்துள்ளார். மற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார்.

சகுந்தலா கூறியதாவது:

அன்றைய முதல்வர் சித்தராமையா செயல்படுத்திய திட்டத்தால், மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்தது. இதை செலவிடாமல் சேமித்து வைத்தேன். அந்த பணத்துடன், தபால் அலுவலகத்தில் நான் சேமித்த பணத்தையும் சேர்த்து, இந்த கடையை திறந்தேன். இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை.

என்னை போன்றே மற்ற பெண்களும், திட்டத்தின் நிதியை பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொண்டால், வருங்காலத்தில் யாரிடமும் கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us