தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் முதல்வராகி 100 நாள் நிறைவு விதான் சவுதாவில் அரசு சார்பில் நிகழ்ச்சி 

 சிவகுமார் முதல்வராகி 100 நாள் நிறைவு விதான் சவுதாவில் அரசு சார்பில் நிகழ்ச்சி 

 சிவகுமார் முதல்வராகி 100 நாள் நிறைவு விதான் சவுதாவில் அரசு சார்பில் நிகழ்ச்சி 


ADDED : செப் 09, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்று இன்றுடன், 100 நாட்கள் ஆகின்றன. இதை முன்னிட்டு பெங்களூரு விதான் சவுதாவில் அரசு சார்பில் நிகழ்ச்சி நடக்கிறது.

கர்நாடக முதல்வராக, க டந்த ஜூன் 3ம் தேதி சிவகுமார் பதவியேற்றார். இன்றுடன் அவர் முதல்வராகி, 100 நாட்கள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், பெங்களூரு விதான் சவுதா விருந்தினர் மாளிகையில்,'வலுவான கர்நாடகாவிற்கான உறுதி - நுாற்றாண்டின் பாதை, முன்னேற்றத்தின் தேர்' என்ற தலைப்பில், அரசு சார்பில், இன்று நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். முதல்வர் சிவகுமார் தலைமையில் நிகழ்ச்சி நடக்கிறது.

தலைமை சிறப்பு விருந்தினர்களாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்கா கபே படை உறுப்பினர்கள், விவசாயிகள், துாய்மை பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள், வாக்குறுதி திட்டங்களால் பயன் அடைந்தவர்களிடம், முதல்வர் சிவகுமார் கலந்துரையாடுகிறார். புதிய அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us