/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 வாலிபர்கள் அடித்து கொலை விஜயபுரா அருகே அதிர்ச்சி
/
2 வாலிபர்கள் அடித்து கொலை விஜயபுரா அருகே அதிர்ச்சி
2 வாலிபர்கள் அடித்து கொலை விஜயபுரா அருகே அதிர்ச்சி
2 வாலிபர்கள் அடித்து கொலை விஜயபுரா அருகே அதிர்ச்சி
ADDED : அக் 14, 2025 04:42 AM
விஜயபுரா: ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் கொலை செய்யப்பட்டதால், விஜயபுராவின் கன்னுார் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.
விஜயபுரா நகரின், கன்னுார் கிராமத்தில் வசித்தவர்கள் சாகர் பெளுன்டகி, 25, இசாக் குரேஷி, 24. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், இருவரையும் தாக்கி, கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவல் அறிந்து கிராமத்துக்கு சென்ற விஜயபுரா ஊரக போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இக்கொலைகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே கிராமத்தில் வசித்த ஈரனகவுடா என்பவரை, சாகர் பெளுன்டகியும், இசாக் குரேஷியும் ஏதோ காரணத்தால் கடுமையாக தாக்கினர். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
இவரது இறப்புக்கு பழிவாங்கும் வகையில், இரண்டு வாலிபர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பல கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.