தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காய்கறிகளில் நச்சுத்தன்மை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 காய்கறிகளில் நச்சுத்தன்மை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 காய்கறிகளில் நச்சுத்தன்மை ஆய்வில் அதிர்ச்சி தகவல்


ADDED : பிப் 25, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளில், மூளை, சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய நச்சுத்தன்மை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய குழுவினர், பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்து, 72 காய்கறி மாதிரிகளை சேகரித்து சோதனை நடத்தினர். சோதனை குறித்த அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த, 12ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள், தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 72 காய்கறிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. அவற்றில், 19 மாதிரிகள் சமையலுக்கு ஏற்புடையதல்ல எனவும், அவற்றில் நச்சுத்தன்மை இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த காய்கறிகளை உட்கொண்டால், சிறுநீரக செயலிழப்பு, மூளை பாதிப்பு, எலும்பு வலி, பிற கடுமையான உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.

கோலார், சிக்கபல்லாபூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், இரண்டு நிலைகளில் மட்டுமே சுத்திகரிக்கப்படும் கழிவு நீரைத்தான் விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனாலே, காய்கறிகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. எனவே, மூன்று முறை சுத்தம் செய்த கழிவுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இதை உடனடியாக செய்ய வேண்டும். இல்லையெனில், பெங்களூரில் வாழ்வோரின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும். அனைத்து காய்கறிகளிலும் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சுத்தன்மை இருப்பதில்லை. அதே சமயம், மக்கள் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே, சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us