ADDED : ஜூலை 15, 2026 11:41 PM
பெலகாவி: 'ஜிம்கான ா ' கிளப்பில் சீட்டு விளையாடியவர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பெலகாவி நகரில் வசிப்பவர் சுரேஷ் ஜாலகாரா. இவர் நேற்று முன் தினம் இரவு, பிரசித்தி பெற்ற ஜிம்கானா கிளப்பில் நண்பர்களுடன், ரம்மி சீட்டு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பைக்குகளில், ஐந்து மர்ம நபர்கள் வந்தனர். இருவர் கிளப் வாசலில் நின்று கொண்டனர். மற்ற மூவர் உள்ளே சென்றனர்.
ரம்மி விளையாடி கொண்டிருந்த சுரேஷ் ஜாலகாராவை, மூவரும் தாக்கினர். துப்பாக்கியால் அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.
துப்பாக்கியால் சுட முயற்சிப்பதை உணர்ந்த சுவேஷ் ஜாலகாரா, அவர்களை தள்ளி விட்டு, கிளப்பை விட்டு வெளியே ஓடி, உயிர் தப்பினார்.
அவரை விரட்டி வந்த நபர்கள், துப்பாக்கியால் அவரை நோக்கி பலமுறை சுட்டும், குறி தவறியதால், வானத்தை நோக்கி சுட்டு, பீதியை ஏற்படுத்தி, அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
நடந்த சம்பவம் முழுதும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பெலகாவி நகர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்தில் இருந்து, கூப்பிடும் துாரத்தில், ஜிம்கானா கிளப் உள்ளது. இது போன்ற பாதுகாப்பான இடத்தில், துப்பாக்கி சூடு நடந்திருப்பதால், அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர்.
பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே, சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார்.
