sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லஞ்சம் வாங்கும் போது சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

 லஞ்சம் வாங்கும் போது சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

 லஞ்சம் வாங்கும் போது சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 02, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லஞ்சம் வாங்கும் போது, லோக் ஆயுக்தா போலீசாரால் பிடிபட்ட எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பெங்களூரு கே.பி., அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு. இவர், சீட்டு மோசடி வழக்கில் முகமது அக்தர் என்பவரை சேர்த்துவிடுவதாக மிரட்டினார். அவ்வாறு செய்யாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கோவிந்தராஜு தெரிவித்தார்.

முதல் தவணையாக 1 லட்சம் ரூபாயை முகமது அக்தர் வழங்கினார். மீதமுள்ள 4 லட்சமும் உடனே செலுத்தும்படி கோவிந்தராஜு மிரட்டினார். இதனால் விரக்தியடைந்த முகமது அக்தர், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார்.

லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறியபடி, கடந்த 28ம் தேதி மைசூரு சாலையில் உள்ள நகர ஆயுதப்படை மைதானம் அருகில் போலீஸ் சீருடையில், முகமது அக்தரிடம் 4 லட்சம் வாங்கும் போது, லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது கோவிந்தராஜு, 'விடுங்கள், விடுங்கள்' என கத்தி, அதிகாரிகளை எட்டி உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, போலீஸ் துறை உத்தரவிட்டது.

இது குறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும்போது, அரசுக்கும், எனக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.

' ' போலீஸ் மாநாட்டிலும் ஊழலுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இது ஏன் நடக்கிறது என்பதை கண்டறிய விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us