/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரவுடி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்
/
ரவுடி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ரவுடி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ரவுடி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ADDED : டிச 21, 2025 05:18 AM

எலஹங்கா: நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, எலஹங்கா நியூடவுன் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தாஸ். இவர் மீது ராஜனகுன்டே, சிக்கஜாலா, எலஹங்கா நியூடவுன் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிறைய வழக்குகள் பதிவாகி உள்ளன. சமீபத்தில் தாஸ் பிறந்த நாள் விழாவில், பெங்களூரு எலஹங்கா நியூ டவுன் எஸ்.ஐ., நாகராஜ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது, பொதுமக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடிவில், எஸ்.ஐ., நாகராஜுக்கு, தாஸின் நில அபகரிப்பு, ரவுடி நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு கிழக்கு மண்டல இணை கமிஷனர் ரமேஷ், எஸ்.ஐ., நாகராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'பொது மக்களுக்கு அச்சுறுத்தல், அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் போலீசார் ஈடுபடக்கூடாது. இத்தகைய தொடர்பு இருந்தால், பொதுமக்கள் எப்படி தைரியமாக போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் அளிப்பர்.
'இனி இது போன்று, ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களுடன் நட்போ அல்லது பார்ட்டியோ அல்லது தொழில் ரீதியாக தொடர்போ வைத்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளார்.

