/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா சொல்வது வேதவாக்கு துணை முதல்வர் சிவகுமார் தத்துவம்
/
சித்தராமையா சொல்வது வேதவாக்கு துணை முதல்வர் சிவகுமார் தத்துவம்
சித்தராமையா சொல்வது வேதவாக்கு துணை முதல்வர் சிவகுமார் தத்துவம்
சித்தராமையா சொல்வது வேதவாக்கு துணை முதல்வர் சிவகுமார் தத்துவம்
ADDED : நவ 25, 2025 06:03 AM

பெங்களூரு: ''குதிரை பேரத்தின் தந்தையே பா.ஜ., தான்; சித்தராமையா என்ன சொன்னாலும் அது வேதவாக்கு போன்றது,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் மேலிடம் மீது மரியாதை வைத்துள்ளோம். தலைமை மாற்றம் பற்றி நானோ, முதல்வரோ பேசவில்லை. ஊடகங்கள் தான் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் முடிவுபடி செயல்படுவோம் என்று முதல்வர் கூறி உள்ளார். அவர் என்ன கூறினாலும் அது வேதவாக்கு போன்றது. அவரது வழிகாட்டுதல்படி நாங்கள் செயல்படுவோம். கட்சிக்கு அவர் பெரிய சொத்து.
டில்லிக்கு சென்றபோது மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்தேன். அவரை நான் மீண்டும், மீண்டும் சந்திப்பது சரியாக இருக்காது. அவரையும் ஊடகத்தினர் தொந்தரவு செய்ய வேண்டாம்.
எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் டில்லிக்கு சென்று உள்ளனர். அவர்கள் அமைச்சர் பதவி மீது ஆசைப்படுகின்றனர். அவர்களை டில்லிக்கு செல்லக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. கார்கேயை ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று ம.ஜ.த., விமர்சித்துள்ளது.
தலைவராக இருப்பவர் திடீரென முடிவு எடுக்க முடியுமா? யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் 'குதிரை பேரம்' நடத்தப்படுகிறது என, பா.ஜ., தலைவர்கள் கூறி உள்ளனர். குதிரை பேரத்தின் தந்தையே பா.ஜ., தான். அவர்களுக்கு தான் பேரம் நடத்தும் பழக்கம் உள்ளது. அவர்களின் பேரத்திற்கு, ம.ஜ.த., பலியாகிவிட்டது.
இவ்வாறு கூறினார்.

