/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாற்காலி ஆட்டம் காணும் போது சித்துவுக்கு ஜாதி நினைவுக்கு வரும்; விஜயேந்திரா பாய்ச்சல்
/
நாற்காலி ஆட்டம் காணும் போது சித்துவுக்கு ஜாதி நினைவுக்கு வரும்; விஜயேந்திரா பாய்ச்சல்
நாற்காலி ஆட்டம் காணும் போது சித்துவுக்கு ஜாதி நினைவுக்கு வரும்; விஜயேந்திரா பாய்ச்சல்
நாற்காலி ஆட்டம் காணும் போது சித்துவுக்கு ஜாதி நினைவுக்கு வரும்; விஜயேந்திரா பாய்ச்சல்
ADDED : பிப் 24, 2026 06:07 AM

பெங்களூரு: ''தன் பதவி நாற்காலிக்கு ஆபத்து வரும் போதெல்லாம், முதல்வர் சித்தராமையா ஜாதி பெயரை இழுத்து வருவார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் சமூக வலை தளத்தில், 'ஆடு மேய்ப்பவன் முதல்வரானதை, என் எதிரிகளால் சகிக்க முடியவில்லை' என்று கூறியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, நேற்று அளித்த பேட்டி:
தன் பதவி நாற்காலி, ஆட்டம் காணும் போதெல்லாம், முதல்வர் சித்தராமையா, ஜாதி விஷயத்தை இழுத்து வருவார். அவரது கட்சியில் ஏற்பட்டுள்ள முதல்வர் பதவி மோதலால், முதல்வர் தன் கோபத்தை ' எக்ஸ்' பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சித்தராமையாவுக்கு பா.ஜ., மீது எந்த கோபமும் இல்லை. அவரது கட்சி சூழ்நிலை, அவரை அப்படி பேச வைக்கிறது.
இவருக்கு காங்கிரசார் என்ன குறை வைத்தனர் என்பதற்காக, இது போன்று குற்றம் சாட்டுகிறார். ஆடு மேய்ப்பவர் முதல்வரானால், சந்தோஷம் தான். அஹிந்தா சமுதாய பெயரை கூறிக்கொண்டு, முதல்வரான சித்தராமையா இம்முறை பட்ஜெட்டில், அந்த சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கட்டும். இறந்த ஆடுகளுக்கு முதலில் நிவாரணம் வழங்கட்டும்.
ஊழல் பற்றி பேச காங்கிரசாருக்கு யோக்கியதை உள்ளதா; என்ன தகுதியை வைத்துக் கொண்டு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகின்றனர். இதே அரசின் ஆட்சியில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்தது. நேர்மையான அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். சித்தராமையா அமைச்சரவையில், அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லையா.
எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயை, தெலுங்கானாவுக்கு கொண்டு சென்று, தேர்தலுக்கு பயன்படுத்தவில்லையா. இல்லை என, பிரியங்க் கார்கே கூறட்டும்.
பூதம் தன் வாயால் பகவத்கீதை கூறுவதை போன்று, காங்கிரசார் எங்களுக்கு உபதேசம் செய்கின்றனர். இதற்கு முன் சித்தராமையா முதல்வராக இருந்த போது, ஆஞ்சநேயா அமைச்சராக இருந்தார். அப்போது என்ன நடந்தது என, அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

