/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை பணிக்கு ரூ.24,000 கோடி; நிதின் கட்கரியிடம் சித்து கோரிக்கை
/
சாலை பணிக்கு ரூ.24,000 கோடி; நிதின் கட்கரியிடம் சித்து கோரிக்கை
சாலை பணிக்கு ரூ.24,000 கோடி; நிதின் கட்கரியிடம் சித்து கோரிக்கை
சாலை பணிக்கு ரூ.24,000 கோடி; நிதின் கட்கரியிடம் சித்து கோரிக்கை
ADDED : ஏப் 03, 2025 07:58 AM

கர்நாடகாவில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கடிதம் கொடுத்து, முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார்.
டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, கர்நாடக பவன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்வர் சித்தராமையா நேற்று டில்லி சென்றார்.
மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உள்துறை பரமேஸ்வர், பொதுப்பணித்துறை சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோருடன் சென்று சந்தித்தார்.
கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய, பல்வேறு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் பேச்சு நடத்தினார். பணிகளுக்கு 24,000 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தார்.
“நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறை, வனதுறை அனுமதியை பெறும் நடவடிக்கையை விரைவுபடுத்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவாக செயல்படுத்த, கர்நாடகா முன்னுரிமை அளிக்கிறது,” என, நிதின் கட்கரியிடம், சித்தராமையா எடுத்துக் கூறினார்.
மைசூரு தேசிய நெடுஞ்சாலை 275ல் 9 கிரேடு பிரிப்பான் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்; தேசிய நெடுஞ்சாலை 75ல் ஷிராடி வனப்பகுதி சாலையில் சுரங்கப் பாதை திட்டம் மேற்கொள்ளுதல்; புனே - பெங்களூரு பசுமை வழி சாலை அமைத்தல்; பெங்களூரு ஹெப்பாலில் மேலும் ஒரு மேம்பாலம்; பெங்களூரு நகரில் மைசூரு சாலை, ஓசூர் சாலையை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை; பெலகாவியில் உயர்த்தப்பட்ட வழித்தட சாலை என்பது உட்பட பணிகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் முதல்வர் கடிதம் வழங்கினார்.
- நமது நிருபர் -

